Homeசெய்திகள்க்ரைம்முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

-

போலியாக புகைப்படத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கைநாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வட மாநில கொள்ளையர்களும் சைபர் கொள்ளையர்களும் ஓடிபிகள் மூலமாகவும் போன் செய்து ஏமாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களிலும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கைமுன்னாள் காவல்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு புகைப்படத்தை வைத்து தொடர்பு கொள்ளும் பாகிஸ்தான் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஹிந்தியில் பேசுவதை ஒரு நபர் ரெக்கார்ட் செய்து சைலேந்திரபாபுவிற்கு அனுப்பியுள்ளார் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபோன்று போலியாக புகைப்படத்தை வைத்து பேசும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் யாரும் பணத்தை நம்பி ஏமாற வேண்டாம். அளிக்கவும் வேண்டாம் எதுவாக இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு கேளுங்கள் என வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்

 

ஏற்கனவே இதே போன்று தமிழ்நாடு மின்வாரிய ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லகானி பெயரிலும் இதுபோன்ற மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ