திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி கணவன் மனைவி தலைமறைவு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது பண்ணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவர் கன்னிவாடியில் அம்மன் அக்ரோ உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார்.
ரவிச்சந்திரன் மற்றும் இவரது மனைவி சுபலட்சுமி ஆகியோர் சேர்ந்து ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், ஐந்து லட்சம் என ஏல சீட்டு கடந்த 15 வருடங்களாக நடத்தி வந்துள்ளனர். இவரது கடைக்கு உரம் வாங்க வரக்கூடிய கன்னிவாடி பண்ணைப்பட்டி, நவாமருத்துப்பட்டி, ஆலத்தூர்பட்டி, குளத்துப்பட்டி, உட்பட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி 50க்கும் மேற்பட்டோரை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணம் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார் .மேலும் பணம் கேட்பவர்களிடம் தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடை மற்றும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். மேலும் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சுபலட்சுமி இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏல சீட்டில் பணம் கட்டி ஏமாந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 35 பேர் இன்று 06.12.24 திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபீடம் புகார் மனு அளித்தனர் அதில் தங்களை ஏமாற்றிய ரவிச்சந்திரனிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு தெரிவித்தனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதற்கு பொதுமக்கள் கிளம்பிச் சென்றனர்.