Homeசெய்திகள்க்ரைம்வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது

-

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 50 பேரிடம் ரூபாய் 90 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன பொது மேலாளர் கைது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது
ரூ.90,000லட்சம் மோசடி

கடலூர் மாவட்டம் மணியன் அரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சைலேஷ் 31. இந்நிலையில் சைலேஷ் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முகநூலில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து போனில் தொடர்பு கொண்டு ஆவடி, சேக்காடு சி.டி.எச் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகி உள்ளார். அங்கு ஆவடி காமராஜர் நகர் 9வது தெருவை சேர்ந்த மினாஜைதீன் என்கிற மினாஹஜுதீன்  40 என்பவர் உரிமையாளராகவும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அப்பா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹமது ஆரிப் ரகுமான் 45 என்பவர் பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது
நிறுவன பொது மேலாளர் முஹமது ஆரிப் ரகுமான் கைது

இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி சைலேஷிடம் ரூபாய் 3 லட்சத்தை வாங்கியுள்ளனர். ஆனால் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தராததால் சைலேஷ் நேரில் சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் சைலேஷ் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தார். ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மைனர் சாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது மினாஜைதீன் என்கிற மினாஹஜுதீன், முஹமது ஆரிப் ரகுமான் ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனம் நடத்தி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 90 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தலைமுறையாக இருந்த முஹமது ஆரிப் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ