Homeசெய்திகள்க்ரைம்பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைதலைவர் ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி சக்கரவர்த்தி, அலுவலர் பிரியா மற்றும் அஸ்வினியின் தாயார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர்கள் குடும்பத்தோடு தலைமறைவு! பட்டதாரிகளை குறிவைத்து ரூ.37 லட்சம் மோசடி.

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!முதுகலை பட்டம் படித்த  இளைஞர்களிடம் மத்திய அரசு துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய்.37 லட்சம் பணம் பெற்று மத்திய அரசின் போலியான நியமன கடிதங்கள் மூலம் பட்டம் படித்த ஏராளமான இளைஞர்களை ஏமாற்றிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைதலைவர்  ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி சக்கரவர்த்தி, அலுவலர் பிரியா மற்றும் அஸ்வினியின் தாயார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர்கள் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளளனர்.

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!இவர்கள் மீது சென்னை, சங்கர் நகர் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலிசார்  தீவிரமாக தேடிவருகின்றனர்.

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!மேற்கண்ட ஜெயராம் M/S. Young Sports of India என்ற நிறுவனம் மூலம் தமிழ்நாட்டின் பட்டம் படித்து விளையாட்டு துறையில் முதன்மை வகித்த ஏராளமான இளைஞர்களை தமிழக மற்றும் டெல்லி பாஜகவின் அரசியல் தலைவர்கள் பெயரை சொல்லி ஏராளமான பணத்தை பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ