Homeசெய்திகள்க்ரைம்ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2000 வருமானம் - மோசடி கும்பல் கைது

ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2000 வருமானம் – மோசடி கும்பல் கைது

-

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 100 நாளைக்கு தினமும் 2000 ரூபாய் தருவதாக கூறி மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 2000 வருமானம் - மோசடி கும்பல் கைது

சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் 1 கோடியே 12 லட்ச ரூபாய் ஏமாந்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய போலீசார் சாம்நாத், விஜயகுமார், தர்மராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டதாக 43 பேர் புகார் அளித்துள்ளனர். மோசடி கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்ட பெண் துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நகை வியாபாரி கைது (apcnewstamil.com)

சம்பந்தப்பட்ட பெண்ணை பிடிப்பதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த மோசடியில் நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்து ஏமாந்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

MUST READ