Homeசெய்திகள்க்ரைம்சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்ட கும்பல் : 5 பேர் கைது

சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்ட கும்பல் : 5 பேர் கைது

-

- Advertisement -

 சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம்  கேட்ட கும்பல் : 5 பேர் கைது

காதல் ஜோடி ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் மூலமாக திருடி சமூகவலைதளங்களில் பதிவிடுவேன் என 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி சிறுவனை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் முதுநிலை படித்து வரும் கல்லூரி மாணவர் பிரவீன் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்

பிரவீன் கல்லூரிக்கு செல்லும் போது சில நபர்களிடம் வாக்குவாதம் செய்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக தனது நண்பரான விளாங்குடி பகுதியை சேர்ந்த மணிமாறன், சிவமணி மூலமாக மிரட்ட முடிவு செய்தார். இதனிடையே அடுத்த நாள் பிரவீனுடன் வாக்குவாதம் செய்த நபர்களுடன் அவரே சமாதானம் செய்து கொண்டார்.இந்நிலையில் தங்களை அழைக்காமல் சமாதானம் செய்து கொண்டதால் கோபமடைந்த அவரது நண்பர்கள் இருவரும் பிரவீனிடமிருந்து செல்போனை பறித்து சென்று விட்டனர்.

பின்னர் செல்போனில் பிரவீனும் அவரது காதலியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தங்களது செல்போனுக்கு சிவமணி மற்றும் மணிமாறன் மாற்றி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என 2 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு பிரவீனை மிரட்டியுள்ளார்.

இது பற்றி இளம்பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிய வந்தவுடன் பெண்ணின் உறவினர்கள் நேரடியாக மணிமாறனிடம் சென்று செல்போனை பிடுங்கி வந்துள்ளனர்.

இதனையடுத்து மணிமாறனின் தாயார் கவிதா செல்போனை கொண்டு வந்து தாருங்கள் சமாதானமாக பேசி கொள்வோம் என கூறியதையடுத்து மணிமாறனின் செல்போனை ஒப்படைப்பதற்காக விளாங்குடி வருமானவரி காலனி பகுதிக்கு இளம் பெண்ணின் உறவினர்கள் வந்தனர்.இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது இளம் பெண்ணின் உறவினர்களுடன் வந்த சிறுவனை திடிரென மணிமாறன் மற்றும் சிவமணி, ரமேஷ் ஆகியோர்  தாக்கியதோடு ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் – பெண் கைது

இதனயடுத்து சிறுவன் கடத்தி வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்த போலீசார் சிறுவனை மீட்டததோடு பணம் கேட்டு மிரட்டிய ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த சிவமணி, மணிமாறன் மற்றும் மணிமாறனின் தாயார் கவிதா, ரமேஷ், விக்கி (எ) விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் விரட்டிபிடித்து கைது செய்தனர். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ