சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் நடத்துனரால். கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் 17 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல்
பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல காலை 5.50 மணியளவில் புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் கார்த்திக், நடத்துநர் ராம்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் வைத்திருந்த துணி பையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக ஐந்து காக்கி நிற பொட்டலங்கள் இருந்ததை கண்ட நடத்துநர், உடனே ஓட்டுனரிடம் தகவல் பேருந்து நிறுத்த தெரிவித்தார்.
இதனை எடுத்து சுதாரித்துக் கொண்ட கஞ்சா கடத்தி வந்த பயணி ஜன்னலின் வழியே எட்டி குதித்து தப்ப முயன்று கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அங்கிருந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பிறகு காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள் கஞ்சா கடத்தி வந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த காஜா உசேன் (45) என்பவரை கைது செய்து,வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 17 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் காஜா உசேனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஊழியர்களின் இந்த செய்யலை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.