Homeசெய்திகள்க்ரைம்மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் - போலி சாமியார் கைது!

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!

-

- Advertisement -

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31). அவர் இன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்தபோது அங்கு வந்த ரகு(45) என்பவர்  தான் சென்னையில் வசிப்பதாகவும் தன்னுடைய சொந்த மாநிலம் கேரளா என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் - போலி சாமியார் கைது!மேலும் தனக்கு மாந்திரீகம் தெரியும் நான் பூஜைகள் செய்து உன்னை கோடீஸ்வரனாக்குகிறேன் எனவும் வரும் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற செய்ய வைக்க முடியும் எனவும் ஆசை வார்த்தை கூறி ஒரு யூடியூப் சேனலில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களையும் காட்டி சதீஷை நம்ப வைத்துள்ளார் தொடர்ந்து சதிஷிடமிருந்து ரூ.3000 முன்பணம் பெற்று அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்து விட்டு வருவதாக அவர் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சதீஷ் பாபு அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார்.

அப்பொழுது திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் ரகு நின்று கொண்டு அங்கு வேறு ஒரு நபரிடம் இதே போல் கூறிக் கொண்டிருந்துள்ளார்.  இது குறித்து சதீஷ் பாபு ரகுவிடம் கேட்ட பொழுது உரிய பதிலளிக்காமல் தனக்கு மாந்திரீகம் தெரியும் அதன் மூலம் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் பாபு இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரகு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை திருவெறுபூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ