Homeசெய்திகள்க்ரைம்பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் - காதலன் கைது!

பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் – காதலன் கைது!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சந்திரலேகா (20).  கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருக்கோவிலூரில் உள்ள தாய் மாமாவுடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தாய்மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணமான சில நாட்களிலேயே  பிரிந்து  தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்  பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேகசன் 30 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து  டிசம்பர் 31ஆம் தேதி சந்திரலேகாவை மட்டும் சென்னைக்கு முதலில் அனுப்பி பின்பு  நானும் சென்னைக்கு வருவதாக கூறி சந்திரலேகாவை மட்டும் வெங்கடேசன் சென்னைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் - காதலன் கைது!

வெங்கடேஷ் சென்னைக்கு செல்லாமல் பெரும் புகை கிராமத்திலேயே இருந்து வந்துள்ளார். சந்திரலேகா தனது தோழியுடன் சென்னையில்   தங்கி இருந்த நிலையில், மகள் வீட்டில் இல்லாததை  கண்டு  அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும்  கிடைக்காததால்  அவரது பக்கத்துவீட்டு பெண்னிடம் அடிக்கடி சந்திரலேகா வாங்கி பேசிய செல்போனை உறவினர்கள் சோதனை செய்ததில் பெரும்புகை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் பேசி பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்திரலேகாவின் சகோதரரர்கள் பெரும்புகை கிராமத்தில் இருந்த வெங்கடேசனின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்ததில் பல  பெண்களுடன்  வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணப்படுத்தி பல  பெண்களிடம்  பேசிய வீடியோக்கள்  இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னைக்கு வெங்கடேசனை நம்பி சென்ற சந்திரலேகா வை  உறவினர்கள் சென்னையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்து வெங்கடேஷ் தவறான நபர் என கூறி ஆதாரங்களை அப்பெண்ணிடம் காட்டிய போது அதிர்ச்சியுற்ற  சந்திரலேகா தனது சகோதரர்களுடன் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன், மாமா பூபாலன் அக்கா புஷ்பா ஆகியோர் மீது  செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வெங்கடேசனுக்கு பல பெண்களுடன் நிர்வாண  வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசியவற்றை ஸ்கிரின் ரெக்கார்டு எடுத்து சேமித்து வைத்துள்ளாதாகவும், மேலும் பல பெண்களின் வாழ்க்கை சீரழிய கூடாது என்பதால் தான்  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களிடம் நிர்வாண வீடியோ பேசியதால் காதலி புகார் - காதலன் கைது!

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட செஞ்சி அனைத்து மகளீர் காவல் நிலைய போலீசார் வெங்கடேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல பெண்களுடன் ஆபாச வீடியோ காலில் பேசிய வீடியோக்களை வைத்திருந்த வெங்கடேசன் மீது அவரது காதலியே  செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்து கைது செய்ய வைத்த சம்பவம் செஞ்சி பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ