Homeசெய்திகள்க்ரைம்கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

-

- Advertisement -

ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர்.

தன்னை அடைத்து வைத்து நிர்வாணபடுத்தி பைப் மற்றம் கட்டையால் கண்மூடி தனமாக தாக்கியதாக பாதிக்கபட்ட ஆட்டு வியாபாரி வீடியோ வெளியீடு. மேலும் தலைமறைவான நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைதுதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் டவுன் பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி ஜபரூல்லா (34) தொழில் ரீதியாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் தீபன் (32) என்பவரிடம் கடனாக சிறுக சிறுக சுமார் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

மேலும் சில மாதங்களாக வட்டியும் அசலும் தராத காரணத்தினால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன. இதில் தீபன் ஜபரூல்லா வீட்டிற்கு சென்று வீட்டின் ஆவணங்கள் எடுத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டை தனது பெயருக்கு எழுதி தர தீபன் ஜபரூல்லாவை மிரட்டியுள்ளார்.

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைதுஇதனையடுத்து ஜபரூல்லா தனது நண்பர் ராஜசேகர் ஆரணி அருகே பெரணமல்லூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையறிந்த தீபன் தனது நண்பர்களான அடையாளம் தெரியாத 4 நபர்களுடன் இன்னோவா காரில் சென்று தலைமறைவாக இருந்த ஜபரூல்லாவை கடுமையாக தாக்கி காரில் கடத்தி கொண்டு கம்மசமுத்திரம் மாதோப்பு பகுதியில் ஜபரூல்லாவை அழைத்து சென்று அடைத்து வைத்து பைப் மற்றம் கம்பு கையால் பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் பல இடங்களில் இன்னோவா காரில் அழைத்து சென்று மது அருந்தவும் கஞ்சா புகை பிடிக்க கூறி வற்புறுத்தி கொடுத்துள்ளனர். இறுதியாக ஆரணி டவுன் சூரியகுளம் அருகில் உள்ள தீபனின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவில் அழைத்து வந்து அடைத்துள்ளனர். இது சம்மந்தமாக ஆரணி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் ஆரணி டி.எஸ்.பி பாண்டீஸ்வரி தலைமையில் தனிப்படை போலீசார் சூரியகுளம் பகுதியில் சல்லடை போட்டு வலைவீசி தேடினார்கள்.

பின்னர் ஓரு வீட்டு மேல் மாடியில் அடைத்து வைத்திருந்த ஜபரூல்லாவை போலீசார் மீட்டு அடைத்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் அபிஷேக் என்பவரை போலீசார் கைது செய்து ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத ஜபரூல்லாவை கடந்த 10 நாட்களாக பல்வேறு இடங்களில் சினிமா பட பாணியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரிய வந்தன. பின்னர் ஜபரூல்லாவை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பின்னர் தலைமறைவான கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீபன் ராகுல்குமார் வீட்டில் அடைத்து வைக்க வீட்டை அளித்த அபிஷேக் உள்ளிட்ட 3பேரை போலீசார் கைது செய்து 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவான அடையாளம் தெரியாத 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கபட்ட ஜபரூல்லா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியீட்டு அதில் தன்னை நிர்வாணபடுத்தி தாக்கியும் கஞ்சா புகை பிடிக்க வற்புறுத்தியும் சுமார் 10 பேர் தன்னை பைப் மற்றும் தடியால் தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தீபன் தான் காரணம் என அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ