Homeசெய்திகள்க்ரைம்கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!

கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!

-

புதுச்சேரியில்  இணையத்திலும், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக் மூலம் டிவி, பிரிட்ஜ், செல்போன், வாஷிங்மெஷின் படங்களை அனுப்பி,  அவை கஸ்டம்ஸில்  பிடிபட்டதால் குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதை பார்த்து பலர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!மேலும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய சம்பவங்களும்  நடந்துள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைமில் புகார்கள் வந்தன. இது தொடர்பாக  கோட்டக்குப்பம் அப்துல் ஷாகித்தை சைபர் கிரைம் போலீஸார்  கைது செய்தனர். அவர் ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாரம் பகுதியைச் சேர்ந்த  அப்துல் சாகித் (36) தற்போது கோட்டக்குப்பத்தில் வசித்து வருகிறார்.  சென்னையில்  பல்வேறு நபர்களுக்கு நாய்க்குட்டி, விலை உயர்ந்த பறவைகளை தருவதாகக்கூறி ஏமாற்றியதாக அவர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

தேனாகப்பேசி போலீஸ் ஏ.சி.பி, மாணவியுடன் உல்லாசம்..! திருட்டுப் போலீஸ் அதிகாரியின் தில்லாலங்கடி!

கடந்த நான்கு ஆண்டுகளாக கஸ்டம்ஸில் பிடிபடுகிற பொருட்களை  குறைந்த விலைக்கு அல்லது பாதி விலைக்கு தருவதாக  புதுச்சேரி,  தமிழகத்தைச் சேர்ந்த பலரையும்  அவர் ஏமாற்றியுள்ளார். இதை நம்பி  பலரும்  அவருக்கு ஜிபே  மூலமாக பணத்தை அனுப்பி உள்ளனர். ஒரு சில பொருட்களை மட்டும் பாதி விலைக்கு  கொடுத்துள்ளார்.

இந்நிலையில் முதலியார்பேட்டையைச் சேர்ந்த கொரியர் அலுவலகத்தில் வேலை செய்யும் ராஜா என்பவர் அவருக்கு வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி  பல்வேறு பொருட்கள் வேண்டுமென அப்துல் சாகித்துக்கு ரூ. 13 லட்சத்தை  ஜிபே  மூலமாக அனுப்பி உள்ளார். ஆனால்,  கடந்த 8 மாதங்களாக பொருட்களையும் தராமல் அவருடைய நம்பரையும் அப்துல் சாகித் பிளாக் செய்து வைத்திருந்ததாக ராஜா கொடுத்த புகாரின் மீது  சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இது தொடர்பாக  ஆய்வாளர்கள்  தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படையினர் அப்துல் சாகித்தை  கைது செய்தனர். விசாரணையில்,  வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக  பலரிடம் அவர்  மோசடி செய்தது தெரியவந்தது. பல்வேறு வழிகளில் அவர்  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அப்துல் சாகித் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

MUST READ