Homeசெய்திகள்க்ரைம்சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

-

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கஞ்சா உள்ளிட்ட 7 வழக்குகள் பல காவல் நிலையங்களில் பதியப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது, பல தரப்பட்ட மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் அவர் மீது சிஎம்டிஏ அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் மீது கடந்த மாதம் 12 ஆம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தி உள்ளது.

மதுரை: இளம்பெண் எரித்து கொலை (apcnewstamil.com)

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த பின், அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், குண்டர் சட்டத்தில் அடைப்பது என்று முடிவானது. அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது, காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று சென்னை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ