Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது

-

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைதுசென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் என் ஆர் டி பாலம் – இப்ராஹிம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனை செய்ததில், இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு கீழே ஒரு பையில் 21 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. பணத்தை எடுத்து வந்த திருவள்ளூர் மாவட்டம் பலபெடுங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரிடம் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. விசாரணையில் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. சென்னை ஈவினிங் பஜார் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப் என்பவர் தற்போது மலேசியாவில் இருப்பதாகவும், இந்த பணத்தை அவர் சொன்ன வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அமானுல்லா எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

இதேபோன்று மண்ணடி பிரகாசம் சாலை சந்திப்பில் முத்தியால்பேட்டை போலீசார் வாகனத்தை ஈடுபட்டிருந்தபோது, முகமது ரிஸ்வான் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ததில் அவரிடம் 11 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பணம் இருந்தது கைப்பற்றப்பட்டது. இருவரையும் கைது செய்து ஹவாலா பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கைப்பற்றப்பட்ட 33 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

MUST READ