அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமாரன் என்ற சரித்திர பதிவு குற்றவாளி தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை. பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது கங்கா பரமேஸ்வரி நகர் இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பூங்கா ஒன்று உள்ளது.
இந்த பூங்காவில் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம் தினமும் ஏராளமான ஆண்கள் பெண்கள் என நடை பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 100க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் அந்த பூங்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்கா பரமேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் இளம்பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்த ஒரு மர்மநபர் ஒருவர் அந்தப் பெண் தனியாக நடப்பதை அறிந்து கொண்டு அந்த பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டியும், ஆபாசமான வார்த்தைகளை கூறியும் பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்ற நபரிடமிருந்து உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய அந்தப் பெண் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையுடன் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த தென்மலை தென்குமரன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது தருவைக்குளம், சிப்காட் மற்றும் புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் இவர் அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வலம் வந்த தென்மலை தென்குமரன் அதிமுக கட்சியை சேர்ந்தவர் என தெரிவித்தன. இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கேட்டபோது இவர் அதிமுக உறுப்பினர் கிடையாது அதிமுகவுக்கு இவருக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒருசில பூங்காக்களில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இடையூறாக மதுபானம் குடிப்பதும், புகை பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், அங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் சிசிடிவி கேமராவை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.