நீங்கள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல், ஷூவில் வைத்துவிட்டு செல்லக்கூடியவரா? உஷாராக இருக்கவும். உங்களுக்காகத்தான் இந்த பதிவு.
ஆவடியில் சவாரிக்கு வந்த போது பேச்சு கொடுத்து, ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தாமரை/40 அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஓலா நிறுவனம் மூலம் ஆட்டோ புக் செய்துள்ளார்.
வீட்டிற்கு ஓலா ஆட்டோ ஓட்டுனராக பெண்மணி ஒருவர் வந்துள்ளார். அந்த பெண்மணியிடம் ஐந்து நிமிடம் காத்திருக்கும் படி கூறிவிட்டு வீட்டின் முன் கதவை பூட்டிக்கொண்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு ஆட்டோவில் எறியுள்ளார்.
பின் ஆசிரியர் செந்தாமரை ஆட்டோவில் ஆவடி காமராஜர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அப்பொழுது செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனராக வந்த பெண்மணி, செந்தாமரையிடம்
எப்பொழுது வருவீர்கள், சொந்த வீடா, என்ன வேலை செய்கிறீர்கள் என்று விசாரித்த படி பேசி வந்துள்ளார். பின்னர் உடனே வருவது என்றால் மீண்டும் என்னையே தொடர்பு கொண்டு அழையுங்கள் என்று கூறிவிட்டு,அவரை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுனர் சென்றார்.
இந்நிலையில் செந்தாமரை மீண்டும் மறுநாள் காலை 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டி இருந்த வீடு திறந்து கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து,வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 1 சவரன் கம்மல்,50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்து உடனடியாக செந்தாமரை ஆவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமணி விசாரணை நடத்தினார். விசாரணை யில் வீட்டில் வேலை செய்யும் பெண் சந்தேகம் படும் படி இருந்தார். அந்த பெண்ணை விசாரித்த போது நான் 11 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது வீட்டின் உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து வீட்டின் பின்புறம் உள்ள பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றேன் என்று கூறினார்.
இதையடுத்து காவல்துறையினர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 10:30 மணி அளவில் மீண்டும் ஓலா ஓட்டி வந்த பெண்மணி முகத்தை புடவையால் மறைத்து கொண்டு வீட்டின் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஆவடி போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் ஆட்டோ ஓட்டுனர் சிக்கவில்லை. இந்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல், ஷூவில் வைக்காமல் புதியதாக யோசித்து வேறு இடத்தில் சாவியை வைக்க வேண்டும்.