Homeசெய்திகள்க்ரைம்குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

-

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என போலிஸார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரைகள் எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே புதுக்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாகவும் போலி பயணாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கி கொடுத்தும் சுமார் 65 க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசு உதவி பொறியாளர் ராஜகோபாலன் என்பவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த புகரின் அடிப்படையில் மோசடியில் ஈடுப்பட்ட காட்டுவிளையை சேர்ந்த தற்காலிக பெண் பணியாளர் ஷகிலா (35) மற்றும் அழகப்பபுரம் பகுதியில் உள்ள சகாய ஜென்சிலா(30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அஞ்சுகிராமம் காவல் துறை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த மோசடியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டு இருப்பதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்களை போலிஸார் காவலில் எடுத்து விசாரனை செய்ய முடிவு. மேலும் இதில் தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி குமரி மாவட்ட தனிப்படை போலிஸார் சென்னை சென்றுள்ளனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. சொந்த வீடு கட்ட மூன்று லட்ச ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஒரு பயனாளி ஒரு லட்சத்து 1563 ரூபாய் செலுத்த வேண்டும். இதுவரை 137 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்பு கடந்த நவம்பர் 9 மற்றும் 26 தேதிகளில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று பங்களிப்புத் தொகை செலுத்திய 74 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட சென்ற போது சில வீடுகளில் வேறு நபர்கள் குடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த  ஷகீலா, அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த  சகாய ஜென்சிலா மேலும் ஆதிஷ் பிரைட் மலர்கொடி ஆகியோர் கூட்டாக 69 பேரிடம் ரூபாய் 70 லட்சத்து 7 ஆயிரத்து 847 பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக நிர்வாக பொறியாளரின் கையெழுத்தை பயன்படுத்தி போலி முத்திரையை பயன்படுத்தி போலி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அதிகாரிகளுக்கு தெரியாமல் குடியிருப்புகளின் சாவியையும் கொடுத்துள்ளனர்.

இதனால் சுமார் 69 பேர் போலி ஆவணங்கள் மூலம் அங்கு குடியிருந்து வருகின்றனர். இது குறித்து உதவி பொறியாளர் ராஜகோபால் அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு ஷகிலா மற்றும் சகாய ஜென்சிலா ஆகியோரை கைது செய்து நீதி மன்றதில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் இந்த மெகா மோசடியில் கைதான பெண்களுடன் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புகார் மற்றும் போலி முத்திரைகள் எங்கு இருந்து கைதான பெண்களுக்கு கிடைத்தது இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை யார் யாருக்கெல்லாம் கொடுத்தார்கள் என்பது போன்ற பல மர்மங்கள் உள்ள நிலையில் இது குறித்து விசாரனை செய்ய சிறையில் உள்ள பெண்களை போலிஸ் காவலில் எடுத்து விசாரனை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான ஆதிஷ் பிரைட் மலர்கொடி சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட தனிப்படை போலிஸார் சென்னை சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து விசாரனை முடிவில் பல அரசு அதிகிரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் கைதாவார்கள் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அன்புடன் உங்கள் நண்பி, நண்பா…. விஜய் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவு வைரல்!

MUST READ