Homeசெய்திகள்க்ரைம்13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?

13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?

-

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உட்பட 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தலைமறைவான பாதிரியார் சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்.

பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ள பாதிரியார் தலைமறைவாக இருந்த போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 சிம்கார்டுகளை பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே குடையால் விளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பாதிரியாரான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, அழகிய மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக இவர் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் கடந்த 11-ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 14ஆம் தேதி பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு இடையே பாதிரியார் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் படங்கள் போன்றவைகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோவை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவரது லேப்டாப் போலீசில் சிக்கி உள்ளதை தொடர்ந்து அதனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மொத்தம் 11 சிம்கார்டுகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி அவர் ஒவ்வொரு இடமாக மாறி தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

11 சிம்கார்டுகளில் 6 சிம் கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளவை மூன்று சிம் கார்டுகள் கேரளாவிலும் 2 சிம் கார்டுகள் தமிழ்நாட்டிலும் உள்ளவை ஆகும். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாக இருப்பதற்கு இந்த சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை மோப்பம் பிடித்த தனிப்படை போலீசார் அவரை கண்காணித்து கைது செய்தனர். பாதிரியாரின் செல்போன் சிக்கனல்கள் பெங்களூரில் காட்டப்பட்டதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை பெங்களூருக்கு தேடிச் சென்றுள்ளனர். அதன்பின் கேரளா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பல சிம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு மாற்றி மாற்றி பேசி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக் ஆன்றோ அங்கு தனியறையில் வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி நெல்லை ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

MUST READ