Homeசெய்திகள்க்ரைம்5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது

-

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது

கடந்த 2020-ம் வருடம் மணிராஜ் என்பவர் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜெண்டுகள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் வசித்து வந்தவர் மணிராஜ். இவருக்கு வயது 56. இவரது மனைவி சாந்தி (வயது 52). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்திலுள்ள பொதிகை நகரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தனர்.

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி கைது
கணவன், மனைவி கைது

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த அட்வகேட் அரசபிரபாகரன் இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அமைப்பதற்காக இவர்களை சந்தித்து உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன்,  தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதனை நம்பி  அட்வகேட் அரசபிரபாகரன் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் சேர்ந்து ஐந்து கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ், சாந்தியிடம் கொடுத்துள்ளனர். மணிராஜ், சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.

அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அட்வகேட் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அட்வகேட் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி கைது
சித்தோடு காவல் நிலையம்

மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ