Homeசெய்திகள்க்ரைம்ஓசூரில் வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவன் மனைவி கைது

ஓசூரில் வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவன் மனைவி கைது

-

ஓசூரில் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய ஆனந்தகுமார் நீதிமன்றத்தில் சரண் , படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை, கணவன் மற்றும் மனைவியிடம் போலீஸ் விசாரணை.

ஓசூரில் வழக்கறிஞர் கொலை  வழக்கில் கணவன் மனைவி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் சுமார் 28 வயது மதிக்கத்தக்க இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு கண்ணன் வெளியே வரும் பொழுது வேறு ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் (எ) ஆனந்தகுமார் 39 வயது என்பவர் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அறிவாளுடன் சென்ற ஆனந்தகுமார் அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதனால் தாலுக்கா அலுவலகம் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஓசூர் ஏ எஸ் பி தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட எஸ்பி தங்கதுரை நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

ஓசூரில் வழக்கறிஞர் கொலை  வழக்கில் கணவன் மனைவி கைது

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் கண்ணன், ஆனந்த குமார் மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனந்த குமார் மனைவியும் வேறு ஒரு மூத்த வழக்கறிஞருடன் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ் பி தங்கதுரை சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஆனந்த் குமார் மற்றும் அவருடைய மனைவி சத்யாவதி இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை 21, மற்றும் 22 மறுநாள் இரு நாட்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்க போவதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்தார், இதனை தொடர்ந்து அவருடைய மனைவி சத்யாவதி வழக்கறிஞர் கைது செய்த போலீசார் தீவிர விசாரணைக்கு பின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் சிறையில் அடைப்பு.

தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை! 

MUST READ