பொழுது விடிந்தால் தகராறு செய்யும் மனைவி; விடியும் முன்னரே தீர்த்துக் கட்டிய கணவன்
நாள்தோறும் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை சேர்ந்த முருகன் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவருடைய மனைவி ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வதை அக்கம் பக்கத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் மனைவி அடிக்கடி சண்டை போடுவதால் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக இரவு முழுவதும் தூங்காமல் காத்திருந்த முருகன் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நைலான் கயிற்றால் கட்டி இறுக்கினார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் மனைவி ஜெயந்தி துடிதுடித்து இறந்துள்ளார். இதனால் பயந்து போன கணவர் முருகன் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுத்துவிட்டு சரண் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.