திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னசொக்கனாம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் ஹரிபாஸ்கர் (19) என்பவர் கடந்த 3.6.2024 தேதி அன்று facebook ஐ பயன்படுத்தி கொண்டிருந்தபோது பழைய ஐந்து ரூபாய் நோட்டுக்கு 3 லட்சம் ரூபாய் தருவதாக வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
அதனை தொடர்ந்து அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு செல்போனில் பேசிய நபர் இது குறித்த விவரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற வேண்டும் என்றால் ஆவணம் தயார் செய்வதற்காக 1500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என அந்த நபர் ஹரிபாஸ்கரிடம் கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஹரிபாஸ்கர் GPay மூலமாக 1500 ரூபாய் பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் சில நாட்களாகியும் பணம் வராததால் ஹரிபாஸ்கர் மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டு பணம் இன்னும் வரவில்லை என கேட்டு உள்ளார். அதற்கு அந்த நபர் பணம் வண்டியில் எடுத்து வரும்போது GST தொடர்பான பிரச்சனையால் பணத்தை கொண்டுவர முடியாமல் வண்டி பாதையில் நிற்பதாக கூறியுள்ளார். மேலும் இதெல்லாம் மோடி பண்ண வேல மோடி பண்ண வேலையால GST செலுத்துனு சொல்றாங்க நீங்க மீண்டும் ரூபாய் 12 ஆயிரம் ரூபாய் GST பணம் கட்டினால் பணம் உங்களுக்கு வந்து சேரும் மேலும் நீங்கள் கட்டிய பணத்திலிருந்து நூறு ரூபாய் எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை தன்னுடைய நபர்கள் ATM மூலமாக எடுத்து உங்களிடம் தந்து விடுவார்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஹரிபாஸ்கர் மீண்டும் அந்த நபருக்கு 5.6. 2024 தேதியன்று 9500-ரூபாயும் 7.6 .2024 தேதியன்று 4000 ரூபாயும் Gpay மூலம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு சில தினங்கள் கழித்து அந்த நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிபாஸ்கர் மற்றும் அவருடைய குடும்பத்தார் கடந்த 3.12. 2024 தேதியன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை அந்த நபர் கண்டுபிடிக்கவில்லை. எனவே கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் எங்களுக்கு காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு எங்களின் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் 3 லட்சம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை செய்து இளைஞன் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.