Homeசெய்திகள்க்ரைம்கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது - கத்தி, வாள்...

கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்

-

கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது - கத்தி, வாள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில்,  கடந்த 16 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு,  செயின் பறிப்பு, வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவையில் பதுங்கி இருந்த 5 இளைஞர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது - கத்தி, வாள் பறிமுதல்

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தீபக் அமர்நாத் (24), கோபிநாத் (19), விக்னேஷ்வரன் (21), அஜய் (24), ஆர்வின் பில்கேட்ஸ் (21) என்பதும், இவர்கள் வேலை தேடி வந்துள்ளதாக கூறி, கோவை சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வசித்து வரும், மதுரையை சேர்ந்த  நண்பர் ஒருவரின் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும் காலையில் வழக்கம் போல வேலைக்கு செல்வது போல பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு, முதல் கட்டமாக இரண்டு இரு சக்கர வாகனங்களை திருடியுள்ளனர். பின்னர் 16 ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ரமேஷ்குமார் என்பவரது செல்போனையும், 17 ஆம் தேதி தனியாக நடந்து சென்ற நபரிடம் 1 செயின் மற்றும் 19 தேதி பீளமேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரின் கழுத்தில் அணிந்திருந்த முருக்கு செயினை பறித்துச் சென்றதும் விசாரணையில்  தெரியவந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது, மதுரை மற்றும் கோவையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்கள், செயின், மற்றும் கத்திகள், வாள்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் –  மேலும் 31 மாணவர்கள்

MUST READ