Homeசெய்திகள்க்ரைம்நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்

நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்

-

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கேரளா இளைஞரின் காரை கடத்த முயன்ற வழக்கில்  தலைமறைவாக இருந்த மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கேரளா வனப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் ( 27), விளம்பர ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவர் கடந்த 13 ஆம் தேதி தனது நண்பர்களோடு காரில் பெங்களூர் சென்று அங்கிருந்து கணினி மற்றும் உதிரிபாகங்கள் வாங்கி கொண்டு கோவை வழியாக கேரளா சென்றுள்ளார்.

அப்போது 14 ஆம் தேதி அதிகாலை மதுக்கரை நெடுஞ்சாலை பாலத்துறை பிரிவு அருகே வந்த போது மூன்று கார்களில் வந்த மர்ம நபர்கள் அஸ்லாம் சித்திக் வந்த காரை மடக்கி, தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்க முயன்றனர். அங்கிருந்து தப்பிய அஸ்லாம் மதுக்கரை போலீஸில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வந்துள்ளனர். முதல்கட்டமாக பாலக்காட்டில் பதுங்கியிருந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, இராணுவ வீரர் விஷ்ணு, அஜய்குமார், விஷ்ணு ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட மேலும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பாலக்காட்டை அடுத்த மலம்புழா அணை அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்ரகசிய தகவல் அடிப்படையில் கேரளா போலீஸ் உதவியுடன் வனப்பகுதியில் பதுங்கியிருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜிதேஷ் (32), ஜினு (30), நந்தகுமார் (31), ஹரீஸ்குமார் (28),ஜிதின் (23),ராஜீவ் (35), மற்றும் அனீஸ் என்கிற நெய்மர் (38) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரனை மேற்கொண்ட போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து குறிப்பிட்ட எண் கொண்ட காரில் சுமார் ரூ.1.5 கோடி ஹவலா பணம் கோவை வழியாக கேரளாவிற்கு வர இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் இதையடுத்து ஹரிகுமார் தலைமையிலான இந்த கும்பல் அந்த ஹவலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/chennai/lets-get-together-at-the-marina-notice-of-protest-on-social-media-police-build-up/94686

இதற்காக கார்களையும் தயார் செய்து அதை எப்படி அரங்கேற்ற போகிறோம் என்ற ஒத்திகையும் பார்த்துள்ளனர். இதையடுத்து 14 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோவை எல்லையை கார் வந்தடையும் என்பதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத மதுக்கரை நெடுஞ்சாலையில் காத்திருந்து திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.  மூன்று கார்களை கொள்ளையடிக்க அனுப்பியதோடு ஒரு காரில் போலீஸ் நடமாட்டம் உள்ளதா என 3 பேர் கண்காணித்து இருந்துள்ளனர்.

ஹவாலா பணம் வரும் காரை கொள்ளையடித்தால் யாரும் புகார் அளிக்க வரமாட்டார்கள் என்பதால்,  கிடைக்கும்  ரூ.1.5 கோடியை அனைவரும் பங்கிட்டு கொண்டு சொகுசாக வாழவும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஜித்தின் மீது கேரளாவில் வழிப்பறி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹவாலா பணம் வருவதாக தகவல் கொடுத்தது யார்? சம்பவதன்று கோவை வழியாக ஹவாலா பணம் கடத்தப்பட்டதா? என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

MUST READ