திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக தெரியவருகிறது. மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடந்து வருவதாகவும் சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாகவும் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. எனவே அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வரும் நிலையில் அங்கு போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாவும் போதை காளான், மெத்தப்பட்டமைன் ,கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோத சம்பவங்களும் அதிகளவில் நடந்துவருவதால் தொடர்ந்து கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் அடிக்கடி வனத்துறையினரும் காவல்துறையினரும் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரோந்து பணிகள் தீவிரப்படுத்தியும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரியவருகிறது . மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாய் சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது எனவும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கிறது எனவும் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அரசு அனுமதி பெற்று இயங்கிவரும் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு மசாஜ் செய்த பெண்களை அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு;ரௌடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் தனிப்படை
சென்னையிலிருந்து சென்ற இளைஞர்களுக்கும் , மசாஜ் சென்டர் பணி பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து, சாலையில் பயந்து ஓடி உள்ளனர். அந்த பெண்களை விடாமல் அந்த இளைஞர்கள் பின் தொடர்ந்து வீடியோ எடுத்தபடியே சுமார் 500 மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து அந்த பெண்கள் தங்கி இருந்த குடியிருப்பு வீடு வரை சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்கள் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், அங்கு சிக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் மிரட்டி பணம் பறிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
கொடைக்கானலில் நிறைய இடங்களில் மசாஜ் சென்டர்கள் இயங்கி வரும் நிலையில், அவை அரசாங்க அனுமதி பெற்று இயங்கி வருகிறதா என்னும் கேள்வி மற்றும் சந்தேகங்கள் பொது மக்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.