சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம் மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலிசார். விற்பனை செய்த பீகார் மாநில இளைஞர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. எனவே கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் கஞ்சா விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் உதகை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதகை மேற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 1 கிலோ 100 கிராம் சாதாரண ரக கஞ்சாவும், நண்ணீரீல் வளர்க்கபடும் முதல் ரக கஞ்சாவான ஹைட்ரோபோனிக் கஞ்சா 100 கிராம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காளம்பூலாவை சேர்ந்த அப்துல் வகாப் (வயது 34), காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர் பால் (35), ஊட்டி வண்டிச்சோலையை சேர்ந்த சுஜன் (35) என்பதும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், வழக்கமான கஞ்சாவில் 3 முதல் 4 சதவீதம் இருக்கும் என்றால், ஹைட்ரோபோனிக் கஞ்சாவில் 30 முதல் 40 சதவீதம் இருக்கும். எம்டிஎம்ஏ போதை பொருளை போல விலை அதிகம் இருக்கக்கூடிய பொருள்.
ஹைட்ரோபோனிக் என்றால் மண் இல்லாமல், ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள் ஆகும். இவற்றை வீட்டிற்குள் வளர்க்கலாம். ஒரு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர். இதே போல உதகை மேற்கு காவல் துறையினர் மேற்கொண்ட மற்றொரு ரோந்து பணியின் போது பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கோவையில் விற்பனை செய்து வந்த லக்கி ராஜ்(25) என்ற இளைஞர் உதகையில் 3.5 கிலோ கஞ்சாவை விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணமான 22 நாட்களில் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு: கதறும் உறவினர்கள்..!