பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைத்த பெங்களூரு போலீஸார்.
கர்நாடகாவில் மாடல் அழகிகளை கொண்டும், பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்திருக்கும் பாதுகாவலர்களை அருகில் வைத்துக் கொண்டும் தொடர்ந்து பல இன்ஸ்டா ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர் அருண் கட்டாரே.
ஒவ்வொரு நாளும் சொகுசு கார்கள், துப்பாக்கியுடன் உள்ள பாதுகாவலர்கள் உடல் முழுவதும் தங்க நகைகள் ஆடம்பர உடைகள் ஆகியவற்றை கொண்டு தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்தவர் அருண் கட்டாரே. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்கு சொகுசு படகுகளை வாடகைக்கு எடுத்து அதில் பல மாடல் அழகிகளை வாடகைக்கு எடுத்து அதன் மூலமாகவும் பல ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பெங்களூரு நகரில் சொகுசு காரில் அவர் வந்து ஏறும்போது மெய்காவலர்கள் ஏகே 47 துப்பாக்கியுடன் அவரை பாதுகாத்து வரும் வீடியோக்கள் வந்தது. பொது இடங்களில் இவ்வாறான போலியான துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு இவர் ரீல்ஸ் வெளியிட்ட நிலையில் அதை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இவருக்கு எதிராக பலர் காவல் துறையில் ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பவே அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயுதச் சட்டம் மற்றும் ஐபிசி 290 பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
ரீல்ஸ் காட்சிக்கு பிரபலமான அந்த இளைஞன், இப்போது பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடதக்கது.