Homeசெய்திகள்க்ரைம்பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க

-

பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் பண மோசடி செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்தார் தலைமை காவலர் கிருஷ்ண பிரதீஷ். பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக இவர் மீது கூடுவாஞ்சேரி, குமரன் நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் சம்பாதிங்க

இவ்வாரு மோசடி செய்த பணத்தில் மது அருந்தி உல்லாசமாக வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்த நிலையில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக், கிருஷ்ணபிரதீஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

MUST READ