Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை

-

ஆம்ஸ்ட்ராங் கொலை  வழக்கில் ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார். சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தூக்கினாரா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணைகடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்கள் யார்? என்ற பட்டியலை திரட்டும் தனிப்படை போலீசார். கோடு வேர்டு மூலமாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணைஇந்த நிலையில் நேற்று ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் சிறையில் அடைப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதியுமான ரவுடி நாகேந்திரனிடம் சென்னை தனிப்படை போலீசார் சிறைக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? பணம் ஏதேனும் இவர் தரப்பில் இருந்து சென்றதா? ஆம்ஸ்டிராங்குடன் பகை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…

மேலும் அதிபயங்கர ரவுடிகளுக்கு சிறையில் தனி பாதுகாப்பு காவலர்கள் எப்போதும் வழங்கப்படுவது உண்டு, அதே போல ரவுடி நாகேந்திரனுக்கும் தனிபாதுகாப்பு காவலர் உண்டு. நாகேந்திரன் சிறையில் யாரை சந்திக்கிறார், என்ன பேசுகிறார், செல்போனில் வீடியோ கால் மற்றும் ஆடியோ ரெக்கார்டுகள் செய்வது வழக்கம், கடிதம் எழுதப்பட்டாலும் அதை ஆராய்ந்த பின்பே அனுப்புவார்கள், குறிப்பாக ரவுடிகளுக்குள் கோர்டு வேர்டு தெரியும் என்பதால் அப்படி ஏதும் திட்டமிட வாய்ப்பு இருக்கும் என்பதால் தொடர்ச்சியாக கண்காணித்து வருவார்கள்.

அவ்வாறு ஏதேனும் நாகேந்திரன் கோடுவேடு மூலமாக ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பதை விசாரிக்க கடந்த ஒரு வருடங்களாக சிறையில் சந்தித்த நபர்களின் விபரங்களை வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் இருந்து தனிப்படை போலீசார் பெற்றுள்ளனர்.

மேலும் நாகேந்திரன் வீடியோ கால் மூலமாக பேசி இருப்பதால் அதன் ஆடியோக்களை கேட்டு பெற்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நேற்று அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட விஷயத்தை நாகேந்திரனுக்கு தெரிவித்த போது கண்ணீர் வடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

MUST READ