Homeசெய்திகள்க்ரைம்நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை

நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை

-

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் ஜகதம்பா தங்க நகைக் கடை உள்ளது. இங்கு பல்சர் பைக்கில் இருவர் வந்து கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். இருவரில் ஒருவர் பர்தா அணிந்திருந்த நிலையில்  மற்றொருவன்   சாதாரண உடையில் ஹெல்மெட் அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனர்.நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளைநுழைந்த சில நிமிடங்களில், முதலில் விற்பனையாளரை பர்தா அணிந்திருந்த ஒருவர் மிரட்டினார். மற்றொருவர் உடனே  உள்ளே சென்ற நிலையில் உரிமையாளரை மிரட்டி கத்தியால் கழுத்தில்  குத்தி அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளில் வெளியில் இருந்த சில தங்க பொருட்களை திருடிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/crime-news/drugs-worth-rs-24-crore-seized-in-thoothukudi/94372

வெளியே வந்த கொள்ளையர்களை விற்பனையாளர் துரத்தி சென்று இரும்பு ஸ்டூலால் தாக்கியுள்ளார்.  இருப்பினும் அவர்கள் பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப் பகலில் புர்கா அணிந்து வந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளைஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

 

MUST READ