Homeசெய்திகள்க்ரைம்டெட்டனேட்டர்களுடன் சிறுமலைக்குள் புகுந்த கேரள இளைஞர்.. பயங்கரவாத சதித்திட்டமா.?

டெட்டனேட்டர்களுடன் சிறுமலைக்குள் புகுந்த கேரள இளைஞர்.. பயங்கரவாத சதித்திட்டமா.?

-

- Advertisement -

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியாருக்கு சொந்தனமான எஸ்டேட்டில் வாட்ச் டவர் அருகே துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கும், திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் ஜேஎம்ஜே என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்று பார்த்தபோது மர்மமான முறையில் அழுகிய நிலையில் இளைஞரின் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்த நபரின் அருகில் பேட்டரி வயர், வெடிபொருட்கள் இருப்பதை கண்டனர். மர்ம வெடி பொருளை எடுக்க முற்பட்டபோது அது வெடித்ததில் இரண்டு காவலர்கள், ஒரு வனத்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வெடிகுண்டு நிபுணர்கள், கியூபிராஞ்ச் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பேட்டரி வயர் மற்றும் 10க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த டெட்டனேட்டர்கள் கொண்டு வரப்பட்டதா? சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெட்டனேட்டர்கள் கொண்டுவரப்பட்டது ஏன்? என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில், இறந்து சடலமாக கிடந்த இளைஞர் கேரள மாநிலம், இடுக்கியைச் சேர்ந்து என்பது தெரிய வந்தது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சிறுமலைக்கு அரசு பேருந்தில் சென்று வாட்சிங்க் டவர் அருகே இறங்கியுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கேரளாவில் இருந்து சிறுமலை வந்ததாக கூறப்படுகிறது.

குடும்பப்பிரச்னை காரணமாக வந்தார் என்றால், எதற்காக 10க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள், அதிபயங்கர வெடிபொருட்களுடன் சிறுமலைப் பகுதிக்கு வரவேண்டும். அவர் மட்டும் வந்தாரா அல்லது கும்பலுடன் சதித்திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் வந்தாரா என்பது குறித்து வல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ