பேருந்துகாக நின்று இருந்த வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர். காவல்துறை பின் தொடர்ந்ததால் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனா். மேற்கு வங்கத்தை சேர்ந்த (மீம் பெ) 18 வயது சிறுமி சேலத்தில் இருந்து சென்னை வந்ததாகவும் இரவு 11 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதாவரம் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த போது அப்போது அங்கு வந்த ஆட்டோ அந்த சிறுமியை வலுகட்டாயமாக கடத்தி வந்து பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அதே ஆட்டோவில் மேலும் அடையாளம் தெரியாத 2 பேர் ஏறி சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இதில் சிறுமி சத்தம் போடவே சாலையில் சென்ற நபர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர்.அதற்குள் சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கி விட்டு ஆட்டோவில் வந்த மூவரும் தப்பி சென்றனர்.சிறுமியை மீட்ட காவல்துறை விசாரணை செய்தனர். தப்பி சென்ற மூவரையும் கண்கானிப்பு கேமிரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி