நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி முதியவர்களிடமிருந்து நகை, பணம் கொள்ளை
சென்னையில் சினிமா பட பாணியில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி வீடு புகுந்து வயதான முதியவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 70 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் இரண்டாவது தெருவில் குடும்பத்தோடு வசித்து வருபவர் சோழன் (66). வயதான இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவரும் இவரது மனைவியும் மட்டுமே தற்போது வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு தனது வேலையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து வயதான தம்பதி இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர்.
திடீரென அதிகாலை 3 மணி அளவில் ஒரு சிலர் வீட்டின் கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டதும் வனஜா கதவை தூக்க கலக்கத்தில் திறந்து பார்த்துள்ளார். அப்போது எதிரில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் முக மூடி அணிந்து கொண்டு கையில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா – மதம் கடந்த மனித நேயம்! இது தான் தமிழ்நாடு!!
மேலும் அந்த கொள்ளையர்கள் வனஜா எதிர்பார்க்காத நேரத்தில் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர்.சோழனின் கழுத்திலும் கொள்ளையர்கள் கத்தியை வைத்து, கத்தினால் கழுத்தை அறுத்து விடுவோம். அமைதியாக இரு என்று கூறி அவர் வீட்டில் இருந்த 75 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு, இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டி விட்டு வாயில் துணியை அடைத்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சோழனின் கையில் கொள்ளையர்கள் கட்டிய கயிரானது சற்று கழண்டு இருந்ததால் அவர் தன்னை விடுவித்து கொண்டு தனது மனைவியையும் காப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
உடனே தனது மருமகனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியதும் காவல் கட்டுப்பாடு அறைக்கு நடந்த விஷயத்தை கூறி உள்ளனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரகசிய திருமணம் குறித்த வதந்திக்கு பதிலடி கொடுத்த சாய் பல்லவி!
சம்பவ இடத்திற்கு இன்று காலையில் மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் போலீசார் வரவழைக்கபட்டு தடய மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதிகாலையில் கத்தி முனையில் வயதான தம்பதியரிடமிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்