Homeசெய்திகள்க்ரைம்தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி - 3 பேர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி – 3 பேர் கைது

-

தேனியில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிலைய பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் கடன் வாங்கியவர்கள் என 9 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பங்குதாரர், மேலாளர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி - 3 பேர் கைதுதேனி அருகேயுள்ள முத்துத்தேவன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான டிராக்டர் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இதன் பங்குதாரர்களாக தேனியைச் சேர்ந்த சந்திரமோகன், நிலக்கோட்டை – கார்த்திக் மற்றும் போடியைச் சேர்ந்த சரண்யா ஆகியோர் உள்ளனர்.

கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் மேலாளராகவும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த மதன் குமார் விற்பனைப் பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஷோரூமில் கடந்த 2022 ஆம் ஆண்டு கீழக்கூடலூரைச் சேர்ந்த செல்வம், ராஜபாண்டி மற்றும் செல்வேந்திரன் ஆகிய மூன்று பேரது பெயர்களில் புதிதாக டிராக்டர் விற்பனை செய்யப்பட்டது.

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி - 3 பேர் கைது

இதற்காக மூவரிடமும் தலா 2 லட்சத்து 10 ஆயிரம் ருபாய் வீதம் முன் பணம் பெற்றுக் கொண்டதாகவும், 3 டிராக்டர்களுக்குமான மீதத்தொகையை 17 லட்சத்து 79ஆயிரத்து 942 ரூபாய், மதுரையில் இயங்கும் டி.வி.எஸ் கிரெடிட் சர்வீஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் விற்பனை நிலையத்தினர் கடனுதவி பெற்றுள்ளனர்.

ஆனால் கடன் தொகையை பெற்றுக் கொண்ட டிராக்டர் விற்பனை நிலையத்தினர், ஒப்பந்தப்படி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகனப் பதிவு செய்து அதன் ஆவணங்களை நிதி நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் கடன் பெற்ற மூன்று நபர்களும் மாதத் தவணையை செலுத்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவனத்தினர், கடன் பெற்ற நபர்கள் மற்றும் நிதி நிறுவனத்தினரிடம் அது குறித்து கேட்டதற்கு சரிவர பதிலளிக்கவில்லை.‌ அதோடு சில நாட்களில் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த இடைத்தரகர் ராஜாங்கம் உதவியுடன் மூன்று டிராக்டர்களை வெளி சந்தையில் விற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை விடியா திமுக அரசு போதிக்க வேண்டும் – இபிஎஸ்

இது தொடர்பாக டிராக்டர் விற்பனை நிலைய பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் கடன் பெற்ற நபர்களிடம் கேட்ட நிதி நிறுவன பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.‌ இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவன மேலாளர் வசந்த், கூட்டுச்சதி சேர்ந்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது கடன் தொகையான 17 லட்சத்து 79ஆயிரத்து 942 ருபாயை மீட்டுத்தரக் கோரி கடந்தாண்டு தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புகார் அளித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று டிராக்டர் விற்பனை நிலைய பங்குதாரர்களான சந்திரமோகன், கார்த்திக், சரண்யா, மேலாளர் – பாலமுருகன், விற்பனைப் பிரதிநிதி மதன் குமார், புரோக்கர் – ராஜாங்கம் மற்றும் கடன் பெற்ற நபர்களான செல்வம், ராஜபாண்டி, செல்வேந்திரன் என 9 பேர் நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டிராக்டர் விற்பனை நிலைய பங்குதாரர்களில் ஒருவரான சந்திரமோகன், மேலாளர் பாலமுருகன் மற்றும் விற்பனைப் பிரதிநிதி மதன்குமார் ஆகிய மூன்று நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அவர்களில் பாலமுருகன், மதன்குமார் ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக போலீஸ் கண்காணிப்பில் பங்குதாரர் சந்திரமோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே டிராக்டர் விற்பனை நிலையத்தினர், தேனியில் இயங்கும் மற்றொரக நிதி நிறுவனத்தில் 53 லட்சத்து 34 ஆயிரத்து 845 ரூபாய் கடனுதவி பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக இடைத்தரகர் ராஜாங்கம் என்பவர் மட்டும் கடந்தாண்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ