Homeசெய்திகள்க்ரைம்3 பெண்களுடன் காதல் திருமணம்... 3 வது மனைவியை கொஞ்சும்போது இன்ஸ்டாவில் சிக்கிய கல்யாண ராமன்..!

3 பெண்களுடன் காதல் திருமணம்… 3 வது மனைவியை கொஞ்சும்போது இன்ஸ்டாவில் சிக்கிய கல்யாண ராமன்..!

-

- Advertisement -

பெரம்பலூர் அருகே ஒருவருக்கொருவர் தெரியாதவாறு மூன்று பெண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன். மூன்றாவது மனைவியை கொஞ்சும் வார்த்தைகளுடன்  இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதால் சிக்கிய நிலையில், முதல்மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.3 பெண்களுடன் காதல் திருமணம்... 3 வது மனையை கொஞ்சும்போது இன்ஸ்டாவில் சிக்கிய கல்யாண ராமன்..!திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ரெங்களாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை கடந்த  5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் காதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தினேஷ் சென்னையில் வாடகை கார் ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்கனவே திருமணமான வள்ளி என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட, முதல்மனைவிக்கு தெரியாமல்  அவரையும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு ஒருஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சென்னையிலிருந்து பெரம்பலூர் வந்த தினேஷ் மினிபஸ் ஒன்றில் ஓட்டுனராக பணியில் சேர்ந்த நிலையில் கடந்த இரண்டு  வாரங்களுக்கு  முன் பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்த முதுகலை மைக்ரோ பயலாஜி (M SC) பயின்ற  ரம்யா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து அவரை  மூன்றாவதாக திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் ரம்யா மீதுள்ள காதல் மோகத்தால்  இருவரும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து மை பொண்டாட்டி ஐ லவ் யூடி செல்லம்  என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த முதல் மனைவியான சௌந்தர்யா தினேஷை தொடர்பு கொண்டு போலீஸாரிடம் போக போவதாக கோபமாக பேசியுள்ளார். இதனால் பயந்து போன தினேஷ் செல்போன் தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தினேஷின் மூன்றாவது மனைவியான ரம்யாவை தேடிச் சென்ற சௌந்தர்யா தினேஷ் இருக்குமிடம் கேட்டறிந்துள்ளார். பின்னர்  பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று தன்னை திருமணம் செய்து தங்களுக்கு  3 வயதில் ஒரு குழந்தை  இருக்கும் போதே தனது கணவர் தினேஷ் என்னை ஏமாற்றிவிட்டு வேறு இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் என்றும். மேலும், தன்னிடம் விவாகரத்து கேட்டு தனக்கு  கொலை மிரட்டல் விடுகிறார் என்றும் புகார் அளித்துள்ளார்.

சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் தினேஷை பிடித்து விசாரணைமேற்கொண்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் அவன் மீது கொலை மிரட்டல் விடுதல் (351 – (2) ), ஏமாற்றுதல் 318.  சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்தல்  82 , , ஆபாசமாக திட்டுதல் 296,  மற்றும் தாக்குதல் செய்தல் 115, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே தினேஷின் மூன்றாவது மனைவியான பட்டதாரி பெண்ணான ரம்யா ஏற்கனவே இரண்டு திருமணம் செயதுள்ள தினேஷோடுதான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்ததால் அவரது பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத 26 வயது ஏமாற்று பேர் வழியை நம்பி படித்து பட்டம் பெற்ற பெண்களே ஏமாந்து வலையில் வீழவைக்கிறது காதல் .

பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!

MUST READ