Homeசெய்திகள்க்ரைம்எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு - சிபிசிஐடி விசாரணை

எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

-

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.

எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு - சிபிசிஐடி விசாரணைகரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் கொடுத்த பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு  ஜூன் 15 தேதி சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்று அளித்து அவரது ஆதரவாளர்கள் 4 பேர்கள் மீது பத்திரப்பதிவு செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக  அளித்த புகாரின் அடிப்படையில், எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர், பிரவீன், உள்ளிட்ட 13 பேர்கள் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் போலி ஆவணங்களை அளித்ததாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த பிருத்திவிராஜ், சிபிசிஐடி போலீசார்  கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர்  ஜாமீன் கேட்டு கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல், முனிசிபல் காலனி, ஸ்கைவே டிரேடர்ஸ், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள ஸ்கைவே டிரேடர்ஸ், குஜிலியம்பாறை அருகே உள்ள லட்சுமி ஸ்பின்னிங் மில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர். ஒரு மணி நேர சோதனைக்கு பின் நிறைவு பெற்றது.

திண்டுக்கல், முனிசிபல் காலனி, ஸ்கைவே டிரேடர்ஸ் நிறுவனம் அரசு சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் நிறுவனமாக இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சம்பந்தமாக கணக்கு வழக்குகளில் ரூ.50 லட்சம் தொடர்பாக 2 ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ