Homeசெய்திகள்க்ரைம்லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

-

- Advertisement -

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச் சேர்ந்த முகமது ஷபி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதில் 14 வங்கி கணக்குகள் மூலம் பணபரிவர்த்தனை நடந்து கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது அம்பலமானது…!

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

லோன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 230 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு, இந்தியா முழுவதும் 14 நபர்கள் இந்தத் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் உடனடி கடன் பெறவேண்டி, செல்போனில் ஒரு உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து, அதன் ஆப் மூலம் ரூ. 10,000/- பணம் வாங்கினார். அவர் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரிடமிருந்து ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம்  பணத்தை பெற்றுள்ளனர். இருப்பினும், புகார்தாரரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள  அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர். இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இப்புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 230 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும், வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-ஆப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார் யார் பேரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர் பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட தொடர் விசாரணையில், இந்தியா முழுவதும் 14 நபர்கள் இந்தத் தொடர் மோசடியில் ஈடுபட்டது அடையாளம் காணப்பட்டது.

இது சம்பந்தமாக  முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  நாரா சைதன்யா உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி( 37) என்பவர்  கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில்  கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்த போது அவருடைய மூன்று வங்கி கணக்குகளில் மட்டும் ரூ. 10.‌65 கோடி பணம் பரிமாற்றம் நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த 14 நபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள்  நடந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது. இப்பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து குற்றவாளிகளை பிடிக்கும்போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். லோன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதர குற்றவாளிகளான ஷெரிப் மற்றும் நஷிப் உள்பட 11 பேர் விசாரணையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் இவ்வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் கம்போடியாவுக்கு வேலைக்கு சென்றோர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இதுபற்றி சைபர் போலீசார் கூறுகையில், செல்போனில் வருகின்ற உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்கிய அனைத்து நபர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டப்படுகின்றனர். மேலும், அந்த மார்பிங்க் செய்த புகைப்படங்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பல மடங்கு அதிகமாக பணத்தை பறிப்பதை இணைய வழி மோசடி காரர்களின் வேலையாகும். ஆகவே பொதுமக்கள், உடனடி லோன் ஆப்-பிள் இருந்து கடன் வாங்க வேண்டாம்.புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தயங்காதீர்” என்றனர்.

இரவில் திருடுவதற்காக பகலில் ஏசி மெக்கானிக்காக வலம் வந்த பலே திருடன் கைது!

MUST READ