கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்தது. இந்த சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என்று கண்டுபிடித்த போலீசார் . இது தொடர்பாக சிதம்பரம் பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, சித்தா ஆகிய சான்றிதழ்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. முக்கிய வழக்கான இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலிசாருக்கு மாற்றப்பட்டது. கடலுார் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர். சித்த மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், திருச்சியை சேர்ந்த போலி சித்த வைத்தியரும், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவருமான சுப்பையா பாண்டியன் (வயது 67) என்பவர் முக்கிய நபராக செயல்பட்டது தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான சிதம்பரத்தை சேர்ந்த, புதுச்சேரியில் வசிக்கும் கவுதம் என்கிற ஒஸ்டின் ராஜா என்பவரிடம் போலி சான்றிதழ்களை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் சுப்பையா பாண்டியனை கைது செய்தனர். பின், அவரது வீடு மற்றும் மருத்துவமனைகளில் போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்களை கைப்பற்றினர்.
இதையடுத்து, முக்கிய குற்றவாளியான தலைமறைவாக உள்ள ஒஸ்டின் ராஜாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடிவந்தனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த ஒஸ்டின் ராஜா (51), அவரது தம்பி நெல்சன் (48), எம்.கே., தோட்டம் தமிழ்மாறன் (53), ஈ.கீரனுார் தங்கதுரை,(41), ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – மீன் வியாபாரி மீது பாய்ந்த போக்சோ