சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்
சிக்கன் குழம்பு சமைக்காமல், வெறும் காரக்குழம்பு மட்டுமே சமைத்ததால், மனைவியை கொடாரியால் வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் மண்டலம் கிஷ்டம்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்கள் கல்லிபெல்லி போசம் (50)- சங்கரம்மா தம்பதியினர். நேற்று இரவு கணவர் கல்லிபெலி போசம் மது அருந்தி வீட்டுக்கு வந்தார். வரும்போது கையுடன் சிக்கன் வாங்கி வந்து மனைவியை சிக்கன் சமைத்து தரும்படி மனைவியிடம் வழங்கினார். ஆனால் சங்கரம்மா சிக்கன் சமைக்க முடியாது, கத்திரிக்காய் குழம்பு உள்ளது. அதனை சாப்பிடும்படி கூறி படுக்க சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் போசம் அதிகாலையில் சங்கரம்மாவை கோடரியால் வெட்டிக் கொன்றார். மனைவி இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட பின்னர், சமைக்காத சிக்கன் கறியுடன் தப்பி ஓடி விட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது சங்கரம்மா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், போசத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.