spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி கைவரிசை…

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி கைவரிசை…

-

- Advertisement -

வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் குடியுருப்பில் கைவரிசை காட்டிய எம்.பி.ஏ பட்டதாரியை காவலர்கள் குடியிப்பில் வசிப்பவர்கள் பிடித்து விசாரணை.

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி  கைவரிசை…சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவல் குடியிருப்பு உள்ளது, இங்கு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் என 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடுக்குமாடி, இரட்டை மாடி கட்டிடங்களில் வசிக்கின்றனர்.

we-r-hiring

காவலர் குடியுருப்பில் எம்.பி.ஏ பட்டதாரி  கைவரிசை…இந்த நிலையில் அடுக்குமாடி பைப்லைன் வழியாக இளைஞர் ஒருவர் இறங்கிவருவதை கண்டவர்கள் குரல் எழுப்பிய நிலையில் அந்த இளைஞரை சுற்றுவளைத்து பிடித்தனர், அவனிடம் 5 ஆயிரம் பணம் தங்க செயின், டாலர், கொளுசு ஆகியவை பிடிபட்டது. பிடிப்பட்ட நபர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(30) எம்.பி.ஏ பட்டதாரி என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கை, கால்களை கட்டி அவனிடம் விசாரனை செய்து வருகிறார்கள், இது சம்மந்தமாக தாழம்பூர் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்கவில்லை என ஆய்வாளர் தெரிவித்தார்.

MUST READ