புதுச்சேரியில் மாயமான மும்பை சிறுமி; விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
மும்பையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது தாய், தந்தையுடன் கடந் தவாரம் புதுச்சேரிக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமியை காணவில்லை. இதையடுத்து பெரியகடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தேடி வந்துள்ளனர். நவம்.1ம் தேதி மாலை கடற்கரை சாலையில் திரிந்த சிறுமியை போலீசார் மீட்டு, அவர் சோர்வாக இருந்ததை கண்டு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது சிறுமியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது. சிறுமியிடடம் குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கடந்த அக்.30ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோ டிரைவர் கோட்டகுப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் ஆட்டோவில் சிறுமியை ஆரோவில் அழைத்து வந்து இறக்கிவிட்டுள்ளார். அப்போது புதுச்சேரியை சுற்றிப்பார்க்க வந்த சென்னையை சேர்ந்த இளைஞர்கள் காரில் சென்னை அழைத்து சென்று அங்கு தனி அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை வாடகை டாக்சி மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆட்டோவை கோட்டகுப்பத்தை சேர்ந்த ஹாஜாமொய்தீன்(34) ஓட்டிச்சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஹாஜாமொய்தீனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். அதை அடுத்து சென்னைக்கு சென்று போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், சென்னையில் நடந்துள்ளது. இதனால் பெரியகடை போலீசார் வழக்கு விசாரணையை கோட்டகுப்பம் போலீசாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
சிறுமியை ஆட்டோ டிரைவர், சுற்றுலா பயணிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புக் செய்த சவாரியை ரத்து செய்த பெண் டாக்டருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பைக் டாக்ஸி டிரைவர்