Homeசெய்திகள்க்ரைம்மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் - மகள்... தற்கொலை? என போலீசார் விசாரணை

மணப்பாறை அருகே கிணற்றில் சடலமாக கிடந்த தாய் – மகள்… தற்கொலை? என போலீசார் விசாரணை

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தாய், மகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – ஜமுனா ராணி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் மேகா ஸ்ரீ என்ற மகளும், 4 வயதில் ஜஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஜமுனா ராணி, தனது மகள் மேகாஸ்ரீ உடன வயலுக்கு சென்ற நிலையில், பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றின் அருகே அவர்களது செருப்பு கிடந்துள்ளது.

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்த தண்ணிரை வெளியேற்றி பார்த்தபோது ஜமுனா ராணி, மேகாஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதனை அடுத்து போலிசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ