காதலை கைவிட்ட காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனா்.
காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா சுயம்கிருஷி நகரை சேர்ந்தவர் லட்சுமி (43). இவரது மகள் தீபிகா (20) பட்டதாரியாவாா். ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த நவீனும் (26) தீபிகாவும் காதலித்து வந்துள்ளனா். இவா்கள் இருவரும் காதலித்து வருவது தீபிகாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதம் தொிவித்துள்ளனா். இந்நிலையில் சில மாதங்களாக நவீன் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளதாக தொிய வந்துள்ளது. இதையறிந்த தீபிகா, நவீனுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால் நவீன் அடிக்கடி தீபிகாவின் வீட்டுக்கு சென்று பேச முயற்சி செய்துள்ளாா். தீபிகா அவரை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து சில நாட்களுக்கு முன் மீண்டும் தீபிகா வீட்டுக்கு சென்ற நவீன், நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம், ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கேட்டதற்கு, தீபிகா `கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான உன்னை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்’ என்று கூறியுள்ளார். தீபிகாவுக்கு ஆதரவாக அவரது தாய் லட்சுமியும் பேசியுள்ளார். இதனால் கடும் கோபத்துடன் நவீன் சென்றுவிட்டார். மீண்டும் தீபிகாவின் வீட்டுக்கு வந்த நவீன், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நவீன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தீபிகாவை குத்த முயற்சி செய்துள்ளாா். இதைக்கண்டு தடுத்த தாய் லட்சுமியை சராமாியாக கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும் தீபிகாவையும் குத்தினார். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், நவீன் தப்பியோடிவிட்டார். கத்திக்குத்தில் காயமடைந்த தாய், மகள் இருவரும் ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தாய், மகள் இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்கள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தீபிகாவுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனா். இருப்பினும் அவரும் சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாகுளம் அருகே பதுங்கியிருந்த நவீனை நேற்றிரவு கைது செய்தனா். திருமணம் செய்ய மறுத்த காதலி மற்றும் அவரது தாயை காதலன் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூ.4,500 கோடியில் திட்டம்… 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: நிதின் கட்கரி அசத்தல் அறிவிப்பு..!