Homeசெய்திகள்க்ரைம்தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

-

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

திருவள்ளூர் அருகே தகாத உறவால் பிறந்த ஆண் குழந்தையை பெற்ற தாயே பள்ளத்தில் வீசி கொன்ற வழக்கில் அதற்கு காரணமான கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள குளத்தில் கடந்த 1-ந்தேதி  பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை  பள்ளத்தில் வீசி கொன்ற அதே பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட லதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்,

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது
குழந்தையின் தாய் லதா

திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சக்திவேல் (24) என்பருடன் லதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கர்ப்பம் அடைந்ததாகவும், தகாத உறவால் பெற்றெடுத்த குழந்தை என கிராமத்தினர் தவறாக பேசுவார்கள் என எண்ணி பள்ளத்தில் வீசி அதன் மீது கற்களை போட்டதால் குழந்தை இறந்ததாகவும் போலீசார் விசாரணையில் லதா வாக்குமூலம் அளித்திருந்தார்.

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது
கள்ளக்காதலன் சக்திவேல்

தகாத உறவு மூலம் லதாவை கர்ப்பமாக்கி குழந்தையை கொன்றதற்கு  காரணமான கள்ளக்காதலனை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இதில் லதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

MUST READ