Homeசெய்திகள்க்ரைம்கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை - மூவர் கைது

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது

-

திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள், தோழி கள்ளக்காதலன் என மூவர் கைது…

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை - மூவர் கைதுதிருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதியில் வசிப்பவர் லட்சுமி வயது 58, இவரது மகன் ராஜசேகர் வயது 42, இவரது மனைவி அமுல் வயது 38, ராஜசேகர் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் ஓட்டுநராக  பணியாற்றி வருகிறார் தற்போது ஆந்திராவில் வேலை பார்த்து வந்துள்ளார், வேலைக்கு சென்றால் ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து தான் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 42 என்பவருக்கும் ராஜசேகரின் மனைவி அமுலுக்கும் இடையே பழக்கம்  ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கு அமுலின் மாமியார் லட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு மாமியார் லட்சுமி மருமகள் அமுலுவை நீ சரவணனிடம் பழக்கம் வைத்து கொள்ளக்கூடாது என கண்டித்துள்ளார் இருவருக்கும் பேச்சு வார்த்தை முற்றி கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை - மூவர் கைதுஅன்றிரவு சரவணன் அமுல் வீட்டிற்கு வந்துள்ளார் தான் மாமியாரிடம் சண்டையிட்ட செய்தியை சரவணனிடம் அமுல் கூறியுள்ளார் என் வீட்டுக்காரர் வந்தால் சொல்லிவிடுவார் அதனால் எனது மாமியாரை கொன்று விடுவோம் என திட்டம் தீட்டியுள்ளனர்,  சரவணன் அமுல் மற்றும் அமுலின் தோழி பாரதி என மூவரும் சேர்ந்து மாமியார் லட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.  வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தூக்கு மாட்டிக் கொண்டது போன்று செட் அப் செய்து விட்டு மறுநாள் வழக்கம்போல் ஒன்னும் தெரியாது போல் மாமியார் தூக்கு  மாட்டிக் கொண்டு இறந்து விட்டார் என ஊராரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவலின் அடிப்படையில் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!

இதற்கிடையே உடற் கூறு ஆய்வு செய்ததில்  லட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது விசாரணையை தீவீரப் படுத்திய போலீசாரின் நடவடிக்கையை கண்டு அஞ்சிய மூவரும் நெரும்பூர் விஏஓ மகேஷிடம் நாங்கள் தான் கொலை செய்தோம் என  ஒப்புக்கொண்டனர்  கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் மூவரையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்…

MUST READ