Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது

-

- Advertisement -

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைதுசென்னை அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு.இவரது மகன் தினேஷ் பாபு. அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மிட்டன் விளையாட்டு மையத்தில் பயிற்சியாளராகவும், பராமரிப்பாளராக  இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முடித்துவிட்டு வெளியில் வந்த போது அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆய்தாங்களால் பட்டபகலில் ஓட ஓட விரட்டி தினேஷ் பாபுவை  முகம்,தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த வெட்டு பட்டு முகம் சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் தினேஷ் பாபு அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள்,சாலையில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ் பாபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொலையில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே கொலை செய்ததாக ஜெயவேல்,மணிகண்டன், ஜூபர், யேசுராஜா நாடார்,பெருமாள் ஆகிய ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைதுதினேஷ் பாபு திருமணமான பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதனால் பெண் தரப்பு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தினேஷ் பாபுவுக்கு பிரச்சினை நிலவி வந்துள்ளது.இது குறித்து அப்பெண் உறவினர்கள் பல முறை தினேஷ் பாபுவை எச்சரித்து உள்ளனர்.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொலை நடந்த அதே பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.எனினும் தினேஷ் பாபு அவரது போக்கை மாற்றாமல் இருந்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டு உறவினர்கள்  கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களை கைது செய்தால் மட்டும் தான் கொலைக்கு திருமணத்தை மீறிய உறவுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை அரங்கேறியதா என முழு தகவல் வெளியாகும்.

பேட்மிட்டன் பயிற்சியாளர் தினேஷ் பாபுவை கூலிப்படை ஏவி கொலை செய்த முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தினேஷ்பாபு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதேபோன்று அந்த பெண்ணும் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தினேஷ் பாபுவுடன் பழக்கத்தில் இருந்து வந்த பெண்ணும் தினேஷ்பாபு ஆகிய இருவரும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் தொடர்பில் இருந்துள்ளனர். அதனால் பெண்ணின் பெற்றோர்கள் பலமுறை தினேஷ் பாபுவை கண்டித்துள்ளனர்.

இருவரும் அவரவர் தம்பதிகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்தது யார்? தினேஷ்பாபு காதலியின் கணவரா? பெற்றோர்களா? அல்லது தினேஷ் பாபுவின் மனைவி தரப்பில் கூலிப்படையை ஏவி உள்ளார்களா என்பது விரைவில் விசாரணையில் தெரிய வரும்  என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் இளம்பெண் கொலையில் பயங்கர அதிர்ச்சி..! மிரட்டிய காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிய காதலன்..!

MUST READ