சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.
தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி முதல் தெருவில் உள்ள கரூர் வைசியா வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திர அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்த மூன்று ஏடிஎம் மிஷின்கள் ஏடிஎம் கார்டு வைத்து பணம் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை.
இதனை அடுத்து அடையாளம் தெரியாத நபர் வெளியே சென்று சுற்றி பார்த்துவிட்டு ஏடிஎம் மிஷின் அறையில் இருந்த ஏசி மற்றும் லைட் வயர்களை பிடுங்கிவிட்டு உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் சிறு கட்டயை கொண்டு உடைத்து விட்டு வெளியில் இருந்து சிசிடிவி கேமராவை கையால் பிடித்து சென்றதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.