Homeசெய்திகள்க்ரைம்புதுமாப்பிள்ளை தற்கொலை – குடிப்பழக்கத்தால் நேர்ந்த துயரம்

புதுமாப்பிள்ளை தற்கொலை – குடிப்பழக்கத்தால் நேர்ந்த துயரம்

-

- Advertisement -

புதுமாப்பிள்ளை தற்கொலை – குடிப்பழக்கத்தால் நேர்ந்த துயரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியை சேர்ந்த 27 வயதுடைய ஞானசேகரன் என்பவருக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

புதுமாப்பிள்ளை தற்கொலை – குடிப்பழக்கத்தால் நேர்ந்த துயரம்
புதுமாப்பிள்ளை தற்கொலை

ஞானசேகரனுக்கு குடி அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்ததால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கணவன், மனைவி இருவரையும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தபோதும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனவேதனையில் இருந்த ஞானசேகரன் விஷம் மருந்து குடித்து மயங்கினார். இவரது உறவினர்கள் ஞானசேகரனை மீட்டு கொடை க்கானல் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுமாப்பிள்ளை தற்கொலை – குடிப்பழக்கத்தால் நேர்ந்த துயரம்
விஷம் குடித்து தற்கொலை

பிறகு அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ