Homeசெய்திகள்க்ரைம்போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு

-

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் உள்ளிட்ட  வருவாய் அலுவலகங்களில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ரகசிய தகவல் அளிக்க பிரித்தியோக எண்கள் அறிவித்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்புகள்ளக்குறிச்சி விஷசாரயம் உயிரிழப்பு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில்  வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க விதமாக ஆட்சியர் அருண்ராஜ் உத்திரவின் பேரில், மாநில கட்டுப்பாட்டு அறை எண் 10581 மாவட்ட  டோல் ஃபிரி எண் 1800 4257088, வாட்ஸ் ஆப் எண் 9042781756. ஆகிய எண்களுடன்  பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் வருவாய் துறையினர் மற்றும் விளம்பர பதாகைகளை நிறுவினார்கள்.

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்புஅதுபோல் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள வருவாய் அலுவலகம், பொழிச்சலூர், கவுல்பஜார், திருநீர்மலை, திரிசூலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பாக விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது,

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்புகுறிபாக  மாநில கட்டுப்பாட்டு அறை, டோல் ஃபிரி எண், வாட்ஸ் ஆப் எண்களில் தகவல் அளிப்பவர் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் எனவும்,  கள்ளச்சாரயம். மதுபதுக்கி விற்பனை, மெத்தனால், எத்தனால் போன்ற எரிசாராயம், கஞ்சாமற்றும் பான்பராக்,  குட்கா போன்ற போதை பொருட்கள், பள்ளிக்கு அருகாமையில் விற்பனை செய்யப்பட்டாலும் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ