Homeசெய்திகள்க்ரைம்உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

-

ராஜமங்கலம் பகுதியில் பிரியாணி ஆர்டர் டெலிவரி செய்ய வந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய ஐ டி ஊழியர் உட்பட 2 நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

சென்னை, வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று  அதிகாலை கொளத்தூர் பகுதியைச்சேர்ந்த மனுகிருஷ்ணா என்பவர் பிரியாணி ஆர்டர் செய்து பேசிய போது, மனுகிருஷ்ணா மேற்படி பெண்ணிடம் உங்களது குரல் ரொமான்ஸாக உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெண் ஊழியர் தனது கணவருடன் சென்று பிரியாணியை டெலிவரி செய்த போது மனு கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ஆகிய இருவரும். மேற்படி பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகள் பேசி மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்  ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இராஜமங்கலம் போலிசார் விசாரணை செய்து டெலிவரி பெண்ணின் புகாரில் மனுகிருஷ்ணா(28) மற்றும் விஷ்ணு(26)ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி வழக்கில் தொடர்புடைய ஆப்பிள் ஐ-போன் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் மனுகிருஷ்ணா தனியார் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், விஷ்ணு போட்டோ கிராபராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட  மனு கிருஷ்ணா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிதம்பரத்தில் பெண் தற்கொலை செய்தி அறிந்து வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை…!

 

MUST READ