Homeசெய்திகள்க்ரைம்ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

-

- Advertisement -

ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.

ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாநில இளைஞர்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!ஈரோடு ரயில் நிலையம் அருகே பயன்பாட்டில் இல்லாத  ரயில்வே ஊழியர் பழைய குடியிருப்பு பகுதியில் கடந்த 4ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் ஒடிசா மாநிலம் பலிகாம்மை சேர்ந்த தண்டபாணி ஷபார் (30) என்பதும்,  பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டும், கைகளால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அவரது செல்ஃபோன் அழைப்புகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் உணவகத்தில் சப்ளையராக வேலை பார்க்கும் அசாம் மாநிலம் டேஸ்பூரை சேர்ந்த பங்கஜ்‌ போரா (22) என்பவரை கடந்த 5ம் தேதி போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து  விசாரணை நடத்தினர். பங்கஜ் அளித்த தகவலின்பேரில்  மேலும் சிலரை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த பங்கஜ், அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

தேடுதல் வேட்டை நடத்தி சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்க சாவடி அருகே பதுங்கியிருந்த பங்கஜை போலீசார் கைது செய்தனர்.  இதற்கிடையில், தண்டபாணி ஷபாரிடம் பழகி வந்த சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ராஜூ (32), ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் என்ற திரிவேணி குமார் (32) ஆகிய மேலும் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், வேலை தேடி ஈரோடு வரும் வடமாநில இளைஞர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் புரோக்கர் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருவதும், இதன் மூலமாக அறிமுகமான தண்டபாணி சபாரை, மது அருந்தலாம் எனக் கூறி பாழடைந்த ரயில்வே காலனி குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று நால்வரும் பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்துள்ளது

தண்டபாணி சபார்  கையில் வைத்திருந்த ஒன்பதாயிரம் ரூபாயை பறித்துக் கொண்ட இவர்கள், வங்கிக் கணக்கில் வைத்திருந்த பணத்தை ஜி பே மூலம் அனுப்புமாறு மிரட்டி உள்ளனர். அதனை தர மறுத்ததால் நால்வரும் சேர்ந்து தண்டபாணி சபாரை கொலை செய்துவிட்டு தப்பி தலைமறைவானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசாரின் பிடியில் சிக்கிய ராகுல், ராஜூ, பங்கஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்..

MUST READ